நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பெண் ஒருவருக்கு செய்த செயல்..!!! இயக்குனர் மூலம் கசிந்த தகவல்…!!!


நடிகரும் சமூக ஆர்வலருமான ஆர்.ஜே பாலாஜி சமூக தொண்டு செய்வதில் ஆர்வம் உள்ளார்.

இவர் தற்போது தர்மபுரியை சேர்ந்த பெண்ணின் தம்பிக்கு செயற்கை கை பொறுத்துவதற்கு உதவி செய்துள்ளார். இந்த தகவலை ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜீ முருகன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில் தர்மபுரியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணின் தம்பிக்கு சமீபத்தில் நடந்த விபத்தில் கை போய் விட்டது.

செயற்கை கை பொருத்த 2 லட்சம் ஆகும் என மருத்துவர்கள கூறியுள்ளனர். இந்நிலையில் ஜோக்கர் படத்தின் போது அறிமுகமான பூஜா எனக்கு தொலைபேசியில் தகவலை கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த தகவலை நான் ஆர்.ஜே பாலாஜியிடம் கூறினேன் . உடனடியாக பாலாஜியும் அவரது நண்பர்களும் சேர்ந்து செயற்கை கை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர்.

இவ்வாறு இயக்குனர் ராஜீ முருகன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

கோடி கோடியாய் சம்பாதிக்கு நடிகர்கள் மத்தியில் தான் வெளியே காட்டிகொள்ளாமல் நடிகர் ஆர்.ஜே பாலாஜி இந்த நல்ல காரியத்தை செய்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!