பிக் பாஸ் 4-ன் தொகுப்பாளர் கமல் இல்லை? இந்த நடிகர்களில் ஒருவர் தானா? – விஜய் டிவி அளித்த பதில்.!

தமிழ் சின்னத்திரையில் பிரபல சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இதில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கமல் தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் தற்போது கமல் முழு நேர அரசியலுக்கு வந்து விட்டதால் நான்காம் சீசனை தொகுத்து வழங்க மாட்டார்.
அதற்கு பதிலாக சூர்யா, மாதவன் அல்லது சிம்பு ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்குவார்கள் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளது விஜய் டிவி. அதாவது நான்காம் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவில்லை என பரவிய தகவலில் உண்மை இல்லை என கூறியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.