10 வருடத்திற்கு பின் தனது தந்தையை சந்தித்த லாஸ்லியா.!

முகென் குடும்பத்தை தொடர்ந்து தர்ஷன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சேரன் உள்ளே வந்தார்.

இதனை தொடர்ந்து, லாஸ்லியாவின் அப்பா வீட்டிற்குள் வருகிறார். சுமார் 10 வருடங்களாக லாஸ்லியா தனது அப்பாவை பார்க்கவில்லை என்று முன்பு ஒரு முறை பிக் பாஸ் வீட்டில் தெரிவித்து இருந்தார்.
10 வருடங்கள் கழித்து தனது அப்பாவை சந்தித்த லாஸ்லியா உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுகின்றார்.

பிக் பாஸ் வீட்டில் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற பாடலின் இசை போடப்பட்ட உடன் லாஸ்லியா அழ தொடங்கிவிட்டார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.