என்னை ஏமாற்றிய நடிகர் இவர்தான் – மறைமுகமாக கூறிய ஆண்ட்ரியா?

தன்னை திருமணமான ஒரு நடிகர் ஏமாற்றி விட்டதாக சமீபத்தில் நடிகை ஆண்ட்ரிய கூறியிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்.

இதில் 2 நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஒன்று, ஷங்கரின் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, தெலுங்கு பக்கம் சென்று, பின் தமிழுக்கே திரும்பிய அந்த நடிகர். மனைவியிடமிருந்து விவாகரத்தானவர். அடுத்து பெரிய இடத்து வாரிசு நடிகர். ஆனால், அவர் ஆண்டிரியாவுடன் எந்த படத்திலும் இதுவரை நடித்ததில்லை. எனவே, ஆண்ட்ரியாவை ஏமாற்றிய அந்த நடிகர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், தான் பங்கு பெற்ற ஒரு இசைநிகழ்ச்சி தொடர்பான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஆண்ட்ரியா ‘ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி’ என பதிவிட்டுள்ளார். வழக்கமாக, புகைப்படத்தை மட்டுமே பகிரும் அவர் இந்த முறை பாடல் வரியையும் குறிப்பிட்டுள்ளார். இதைக்கண்ட பலரும் ‘ கண்டிப்பாக அந்த அரசியல் வாரிசு நடிகர்தான்’ என கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

ஆண்ட்ரியா தான் பாடிய பாடலின் முதல் வரியை அங்கே எதேச்சையாக பதிவிட்டாரா அல்லது குறிப்பால் உணர்த்துகிறாரா? அவர்தான் அந்த நடிகரா என்பது ஆண்ட்ரியாவுக்கே வெளிச்சம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.