தந்தைக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனையடுத்து அவர் கலைத்துறையில் தனது 60 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளார். இந்த 60 ஆண்டுகளில் அவர் தேசிய விருதுகள் உள்பட பல்வேறு விருதுகள் பெற்று தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் உலக சினிமாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகினரும் கமல்ஹாசனின் அறுபது ஆண்டு சேவை நிறைவு தினத்தை அடுத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைப்பக்கத்தில் தனது தந்தைக்கு தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்

60 ஆண்டுகள் கலைச்சேவை என்ற சாதனையை செய்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களை பார்த்து தான் பலர் நடிப்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டார்கள். நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் ஒரு தூண்டுதலாக இருக்கின்றீர்கள். இந்த நேரத்தில் எனக்கு பிடித்த நீங்கள் நடித்த மகாநதி திரைப்படத்துக்கு போஸ்டரை பகிர்ந்துள்ளேன். தைரியமான, அழகான, ஒரு எமோஷனல் நிறைந்த சவாலான கேரக்டரில் இந்த படத்தில் நீங்கள் நடித்து இருந்தீர்கள்.

கலைத் துறைக்கு கடந்த 60 ஆண்டுகளாக நீங்கள் உங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர்கள். உங்களின் இந்த 60 ஆண்டு சேவையை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று ஸ்ருதி ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மேலும் அவர் இந்த பதிவில் ‘மகாநதி’ படத்தின் போஸ்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.