ஆஸ்திரேலிய பட விழாவில் விஜய் சேதுபதிக்கு விருது… வைரலாகும் புகைப்படம்..!

ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மொழிகளை சேர்ந்த 60 படங்கள் திரையிடப்படுகிறது. இதில் குமாரராஜா தியாகராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் போட்டி பிரிவில் திரையிடப்பட்டது.

சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த படம் ஆகிய பிரிவின் கீழ் போட்டியிட்டது. இதில் சிறந்த நடிகராக விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ரன்வீர் சிங் நடித்த கல்லிபாய் சிறந்த படமாகவும், அதனை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் சிறந்த இயக்குனராகவும் விருது பெற்றனர். இதே படத்தில் நடித்த நடிகை தபு சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விழாவில் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் முன்னணியினர் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் சேதுபதி நடிகை காயத்ரியுடன் கலந்து கொண்டார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.