வைரலாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸ்!!

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தம்பதியின் மூத்த மகள் ஜான்வி “தடக்” என்ற படத்தின் மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு படமான “டியர் காம்ரேட்” இந்தி ரீமேக் செய்கிறார்கள். இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோஹார் ரூ. 6 கோடிக்கு கொடுத்து வாங்கியுள்ளார். அந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

ஜான்வி கபூர் தற்போது “கார்கில் கேர்ள்” படத்தில் நடிப்பதற்காக தனது எடையை அதிகரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அவர் இடுப்பை ஆட்டி ஆடும் பெல்லிநடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்தமிழில் அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளர் என சில வாரங்கள் முன்பு செய்தி பரவியிருந்தது. ஆனால் அது உண்மையில்லை என்றும் ஒரு சில செய்திகள் வெளியாகின. தற்போது ஜான்வி கபூர் ஜிம் மற்றும் டான்ஸ் கிளாஸ் சென்று கொண்டிருக்கிறார். ஜான்வி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் காட்சியும் டான்ஸ் ஆடும் காட்சியும் அவர் அவ்வபோது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம்.

https://www.instagram.com/p/B02pK8Nh3t-/?utm_source=ig_embed

இந்தமுறை ஜான்வி தன்னுடைய டான்ஸ் கிளாசில் பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இந்த பெல்லி டான்ஸ் பார்த்த பிரபலங்கள் ஜான்விக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், ஜான்வி கபூர் தல அஜித் நடிக்கும் 60ஆவது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஹெச் வினோத் இயக்கும் இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார். அதனால், என்னவோ தல60 படத்தில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில், தல60 படத்தின் பூஜை நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.