பிக்பாஸ் 17வது போட்டியாளர் உறுதியானது… இந்த தேதியில் வருகிறாராம்.! வெளியான ஆதாரம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 பேர் வெளியான நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைய போவது யார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 17 வது போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்டு மானஸா, சங்கீதா கிரிஷ், கஸ்தூரி போன்ற பலரின் பெயர் அடிபட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் கஸ்தூரி தான் 17 அந்த வது போட்டியாளர் என்பதற்கான ஒரு ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை கஸ்தூரி, வாட்ஸ் அப் உரையாடல் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு முக்கிய நபருடன் உரையாடி இருக்கும் கஸ்தூரி வரும் 4 ஆம் தேதி பிக் பாஸ் வீட்டில் நுழைய தயார் என்பது போல தெரிவித்துள்ளார். ஆனால், இந்த பதிவை சிறிது நேரத்திலேயே நிறுத்திவிட்டார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக தொடர்ந்து வரும் ஒரு முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டு பிக் பாஸ் துவங்கும் போதும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொல்லப்போகிறார் என்று செய்திகளும் பரவியது.

View this post on Instagram

Clean lines… #sareeswag

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசன் வரை உள்ள போட்டியாளர்களை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் காஸ்தூரி. இவர் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் வனிதாவை போல கன்டன்டை கொடுப்பார் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.