கல்யாணம் பண்ணிக்கலாம் என கேட்ட 18 வயது பெண், மாதவன் கொடுத்த பதில் – வைரலாகும் போட்டோ.!

நடிகர் மாதவன் அலைபாயுதே படத்தில் அறிமுகமான நாளிலிருந்து அவருக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக மாதவனுக்கு பெண் ரசிகைகள் அதிகம்.

அவர் கோலிவுட்டில் கால்பதிக்கும் முன்பே திருமணம் செய்து கொண்டார் என்ற விஷயம் பல பெண்களின் மனதில் இடியாக இறங்கியது. காரணம் மாதவனை அந்த அளவிற்கு ரசிகர்கள் விரும்பினார்கள்.

https://www.instagram.com/p/B0RM8nXlKdQ/?utm_source=ig_embed

இதையடுத்து பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச் சுற்று படத்தில் நடித்து தனக்கு இன்னும் க்ரேஸ் குறையவில்லை என்பதை நிரூபித்தார். அதன் பிறகு விஜய்சேதுபதியுடன் அவர் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் நடிகர் மாதவன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைக்கண்ட பெண் ரசிகை ஒருவர், எனக்கு 18 வயது ஆகிறது, நான் உங்களை திருமணம் செய்து கொண்டால் தவறா? என்று கமெண்ட் செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மாதவன், உங்களுக்கு என்னை விட ஒரு சிறந்த நபர் கணவராக அமைவார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று பதிலளித்துள்ளார்.மாதவனுக்கு 18 வயதில் வேதாந்த் என்ற மகன் உள்ள நிலையில் ரசிகையின் இந்த கேள்வி, கோலிவுட்டில் அவருக்கான இடம் இன்னும் காத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.