பிக் பாஸ் ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட அருண் விஜய்!!

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக தொடங்கியது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி. மூன்று வாரங்களை சண்டை சச்சரவுடன் கடத்திய நிலையில், 4 வது வாரத்திற்குள் எட்டி வைத்து விட்டது.

இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஃபாத்திமா பாபு முதலாவது நபராக எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்த வாரமும் எலிமினேஷனுக்காக வனிதா விஜயகுமார், சரவணன், மதுமிதா, மீரா மிதூன், மோகன் வைத்தியா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இதில் மோகன் வைத்தியா, மதுமிதா, சரவணன் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர் என்பது தெளிவானது.

https://www.instagram.com/p/Bz1F1ujhfLJ/

இந்த வாரம், வனிதா மற்றும் மீரா மிதூனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்பது இன்று ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் தெரியவரும் என்று நேற்று எதிர்பார்த்து இருந்தனர் ரசிகர்கள். அப்போது பிரபல நடிகர் அருண் விஜய், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகன் தான் அருண் விஜய், இவருடைய இளைய சகோதரி தான் வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி வருவதில் முதன்மையாக உள்ளார் வனிதா.

இதனால் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்களிடம் அதிருப்தியை பெற்று வந்தவர் வனிதா. இந்நிலையில் நடிகர் அருண் விஜய், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், இந்த புகைப்படம் சூப்பர், மாஸ், வெறித்தனம் என்றும் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் பல ரசிகர்கள், பிக்பாஸ் சீசனில் பங்கேற்றுள்ள வனிதாவை குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.