பிக் பாஸிற்குள் சாண்டி செல்ல இப்படியொரு காரணம் இருக்கா? – அவரின் மனைவியே சொன்ன தகவல்

கடந்த 1986ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பிறந்த இவர் தனது 33ஆவது பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டில் கொண்டாடுவாரா? என்ற கேள்வி மூன்று தினங்களாகவே வலைதளங்களில் பரவிக் கொண்டிருந்தது .

இவரது பிறந்தநாள் ஜூலை 5. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென சாண்டிக்கு வாழ்த்து கூறி அவரது குழந்தையின் அழுகுரல் ரிங் டோன் ஒலிபரப்பப்பட்டது. இதையடுத்து அவரது குழந்தை இவர் புகைப்படத்தை கொஞ்சும் ஒரு வீடியோ ஒன்றும் அங்குள்ள டீவியில் ஒளிபரப்பட்டது. இதனைப் பார்த்து சாண்டி குழந்தையை நினைத்து கதறி அழுதார்.

பிக்பாஸ் வீட்டில் சாண்டி நேற்று தனது மகளை திரையில் கண்டு கண்கலங்கியது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவரது மனைவி சில்வியா பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார்.

அதில் அவர், “முதலில் அவர் பிக்பாஸில் கலந்து கொள்ள போகிறேன் என்றவுடன் நாங்கள் அனைவரும் வேண்டாம் என்று கூறினோம். ஆனால் சாண்டி தன்னிடம் ஒருத்தர் இதை வந்து கேட்டிருக்கிறார் என்னால் எப்படி மறுக்க முடியும்” என்று கூறினார்.

அதன் காரணமாகவே அவர் வீட்டின் உள்ளே சென்றார். அதுமட்டுமின்றி எனக்கும் அவருக்கு இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என தோன்றியது. அதனாலே நானும் விட்டுவிட்டேன் எனக் கூறி கண்கலங்கினார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.