பிக்பாஸ் வீட்டில் 17 போட்டியாளராக களம் இறங்க போகும் போட்டியாளர் யார் தெரியுமா..?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்களைத் தொடர்ந்து 16-வது போட்டியாளராக யாரும் எதிர்பார்க்காத மொடல் மீரா மிதுன் எண்ட்ரி கொடுத்தார்.

மீரா மிதுவின் எண்ட்ரிக்கு பின்னர் தான் பிக்பாஸ் வீடே ஒரு போர்க்களமாக மாறியிருக்கிறது. மீரா மற்றும் வனிதாவுக்கு கடும் சண்டை நிலவி வருகிறது.

இந்நிலையில் 17-வது போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முதலில் பவர் ஸ்டார் தான் அந்த போட்டியாளர் என்று கூறப்பட்டது, ஆனால் தற்போது அவர் இல்லை எனவும், செய்தி வாசிப்பாளர் பனிமலர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் அதே சமயம் பிக்பாஸ் முதல் சீசனில் யாரும் எதிர்பார்க்காத சமூகவலைத்தல பிரபலம் ஜுலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அதே போன்று தான் இவரையும் பிக்பாஸ் இறக்கலாம் என்று கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்…


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.