பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இன்னொரு பிரபலம்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள ‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் நடிகை மதுமிதா மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா ஆகியோர் உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்

அதேபோல் அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்த நடிகை அபிராமி வெங்கடாச்சலம், வனிதா விஜயகுமார் ஆகியோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மேலும் ஒரு பிரபலம் கலந்து கொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. அவர்தான் குணசித்திர நடிகையும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு. இன்னும் இந்த நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள் யார் யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.