1 லட்சம் தர்றேன் வா… வருத்தபடாத வாலிபர் சங்கம் ஷாலு வெளியிட்ட அதிர்ச்சி ஆதாரம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவிதாவுடன் படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.

அந்த படத்தில் கிராமத்து லுக்கில் இருந்த இவர், நேரில் படு மாடன் மங்கையாக இருந்து வருகிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் சில ஆண் நண்பர்களுடன் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியானது. இதனால் சமூகவலைத்தளங்களில் வெகு விரைவில் ரீச் ஆகிவிட்டார்.

சமீபத்தில் இவரிடம் ஒருவர் விளம்பரபடத்தில் நடிக்க சம்மதம் கேட்டுள்ளார். ஒரு விளம்பரத்திற்கு 50 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் 1 லட்சம் தருகிறேன் என்னுடன் டேட்டிங் வருகிறீர்களா என்று அந்த நபர் ஷாலுவை தொடர்ந்து தொல்லை செய்துள்ளார். அந்த நபர் அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிப்பதற்காக தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்தாகவும், அதனை வெளியில் சொன்னால் எந்த பயனும் இல்லை என்பதால் அதனை சொல்லவில்லை என்றும் ஷாலு ஷம்மு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.