மகன் பெரிய ஹீரோ.. ஆனால் அப்பா இன்னும் பஸ் டிரைவர்..!! கசிந்த தகவல்..!!


பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கோலார் கோல்டு ஃபீல்ட்ஸ்(கேஜிஎஃப்) படம் வரும் 21ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படம் கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் கோரபட்டி சாய் காருவுடன் கன்னட திரையுலகம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரிடம் கன்னட திரையுலகில் டாப் நடிகர் யார் என்று கேட்டேன். யஷ் என்று ஒரு புதுப் பையன் வந்து ஹிட் மேல் ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

யார் அந்த புதுப் பையன் என்று நான் சாயிடம் கேட்டேன். அதற்கு அவர் ஒரு பஸ் டிரைவரின் மகன் தான் இந்த யஷ் என்றார். அதை கேட்டு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. யஷ் பெரிய சூப்பர் ஸ்டாராகிய பிறகும் அவரின் தந்தை தற்போதும் பஸ் டிரைவராக தனது பணியை தொடர்வது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்.

யஷை விட அவரின் தந்தை தான் பெரிய சூப்பர் ஸ்டார். நான் ஆர்ஆர்ஆர் பட விவாதம் தொடர்பாக பெங்களூருக்கு சென்றபோது யஷ் வந்து என்னை சந்தித்து பேசினார். அப்பொழுது கேஜிஎஃப் படத்தின் சில விஷுவல்களை காட்டினார். அவை அற்புதமாக இருந்தன. அந்த விஷுவல்களை பார்த்து மிரண்டு போனேன். உடனே மும்பையில் உள்ள அனில் டான்டனுக்கு போன் செய்து யஷ் படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கூறினேன்.

படம் நன்றாக இருந்தால் போதும் அது எந்த மொழி என்று பாராமல் எங்கள் தெலுங்கு ரசிகர்கள் ஊக்குவிப்பார்கள். இந்த விஷயத்தில் எங்கள் ரசிகர்களை நினைத்து பெருமையாக உள்ளது என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!