ரகசியமாக நடந்து முடிந்த ரிச்சாவின் நிச்சயதார்த்தம், விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மயக்கம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ரிச்சா. இந்த படத்தை தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார்.

இருப்பினும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு திரையுலகை விட்டு விலகி கொண்ட ரிச்சா பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் முக்கிய பதவியில் இருந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு நிச்சயம் முடிந்து விட்டது. வெளிநாட்டை சேர்ந்த ஜோ என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தேன்.

எங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது, ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.