ஒரு அம்மாவாக பேசியது தப்பா! கண்ணீருடன் வீடியோவை வெளியிட்ட VJ அஞ்சனா

ஒரு குழந்தையின் அம்மாவாக பேசியது என்ன தப்பு ஒரு பிள்ளை பெற்றோர்கள் தாய் தான், பத்த பிள்ளைகள் பெற்றவர்களும் தாய் தான் VJ அஞ்சனா.

பிரபல தனியாா் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவா் அஞ்சனா. திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தனது சுறு சுறுப்பான நடவடிக்கைகளால் பெருவாரியான ரசிகா்கள் தன் பக்கம் கவா்ந்து இழுத்தவா்.

கயல் நாயகன் சந்திரனும், அஞ்சனாவும் காதலித்து இருவீட்டாா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது.

கயல் சந்திரனும், அஞ்சனாவும் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது இண்ஸ்ட பக்கத்தில் பதிவுயிட்டு வருவார்கள்.

https://www.instagram.com/tv/Byrhr_KFwcq/?utm_source=ig_embed

சில நாட்களுக்கு முன் அஞ்சனாவை தனியார் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர் அந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க ஒரு அம்மாவா நீங்கள் பேசுங்கள் என அழைத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதற்கு பலரும் பல விதமாக பேசி வருகின்றனர், ஆண்கள் பேசியது கூட தாய்மை பற்றி தெரியாமல் பேசுகிறார்கள், ஆனால் பெண்கள் நீங்களே இப்படி பேசலாமா என்று வருத்தத்துடன் இந்த வீடியோவை பதிவுயிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.