தவறாக நடந்துகொண்ட விஷாலை அறிக்கை வெளியிட்டு வெளுத்து வாங்கிய வரலட்சுமி- வெடித்த சண்டை

தமிழ் சினிமா பிரபலங்களில் நண்பர்களாக இருந்தவர்கள் விஷால்-வரலட்சுமி. இடையில் அவர்கள் காதலிக்கிறார்கள், திருமணம் செய்வார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.

ஆனால் விஷாலுக்கு, அனிஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில் நடிகர் சங்கம் விஷயங்கள் குறித்து விஷால் ஒரு வீடியோ வெளியிட்டார், அதில் சரத்குமார் அவர்கள் பற்றி தவறான விஷயங்கள் கூறியுள்ளாராம்.

வீடியோவை பார்த்த வரலட்சுமி, எனது அப்பா இந்த முறை அந்த விஷயங்களில் இல்லை என்றாலும் அவரை தவறாக கூறியுள்ளீர்கள். நீங்கள் செய்த நல்லதை வெளிப்படுத்தாமல் தவறாக விமர்சனம் செய்கிறீர்கள். என்னுடைய ஓட்டை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.