ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலுக்காக யுவன்சங்கராஜா… செம குஷியில் ரசிகர்கள்

சீரியல்களில் பல வருடங்களாக குறிப்பிட்ட தொலைக்காட்சி தான் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் வருட ஆரம்பத்தில் இருந்து அந்த தொலைக்காட்சியின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்தது செம்பருத்தி.

அதில் இருந்து அந்த தொலைக்காட்சியின் TRP இறங்கவே இல்லை, இதனாலேயே அந்த சீரியல் குழுவினர் படு மகிழ்ச்சியில் இருந்தனர், இப்போது மற்றொரு சாதனையை அந்த சீரியல் நிகழ்த்தியுள்ளது.

சீரியல் 500-வது எபிசோடை எட்டியுள்ளது, இதனால் தொலைக்காட்சி கேள்வி-பதில் போட்டி வைத்து 500 பேருக்கு பரிசு அளிக்க உள்ளனர்.

செம்பருத்தி 500ஆவது எபிஸோடை முன்னிட்டு சாதனா சர்கம் மற்றும் விஜய் பிரகாஷ் ‘ரகசியமான காதல்’ என்ற சிறப்பு பாடலை பாடியுள்ளனர். அதை பற்றி சாதனா மனம் திறக்கிறார்.

அதோடு இந்த ஸ்பெஷல் விஷயத்துக்காக சாதனா சர்கம் மற்றும் விஜய் பிரகாஷ் இணைந்து ஒரு பாடலும் பாடியுள்ளார்களாம். இதை ஜீ தமிழ் தொலைக்காட்சி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விஜய் பிரகாஷ் மற்றும் சாதனா சர்க்கம் பாடியுள்ள செம்பருத்தி சிறப்பு பாடலை இன்று உங்கள் அபிமான இசையமைப்பாளர் @thisisysr வெளியிடுகிறார்.

இந்த மாபெரும் வெற்றியை செம்பருத்தி சிறப்பு பாடலோடு கொண்டாடுவோம்.#Sembaruthi500 #Sembaruthi #ZeeTamil

இந்த பாடலை நம்ம இசை ஜாம்பவான் யுவன்சங்கர்ராஜா தான் வெளியிடுகிறார். இதனால் அந்த பாடு வெற லெவல் ரீச்சாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.