நடிகையின் திருமணத்திற்கு செல்லாதது ஏன்..? மனம் திறந்த ஜீலி..!!


நடிகை நமீதாவின் திருமணம் கடந்த வாரம் திருப்பதியில் நடந்தது இந்த திருமணத்தில் சரத்குமார் உள்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதே போல பிக்பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

ஆனால் ஓவியா, ஜூலி மட்டும் கலந்து கொள்ளவில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் ஆர்வமாக கலந்து கொள்ளும் ஜூலி, நமீதா திருமணத்தில் மட்டும் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கு ஜூலி பதில் சொல்லும்போது, நமீதா தனது திருமணத்திற்கு பிக்பாஸ் ஹவுஸ் மேட்சான சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்.

தனக்கு அழைப்பு விடுக்கவில்லை. அழையாத விருந்தாளியாக செல்ல விரும்பவில்லை என்று கூறி உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#