நடிகை கஜோல் – அஜய் தேவ்கான் குடும்பத்தில் நடந்த சோகம்!

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் குடும்பத்தில், அரங்கேறியுள்ள சோகத்திற்கு, பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை கஜோலின் கணவர் நடிகர் அஜய் தேவ்கன் அப்பாவும், பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவரான வீரு தேவ்கன் , இன்று காலை (மே 27) உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார்.

அஜய் தேவ்கனின் தந்தை … வீரு தேவ்கன் பாலிவுட் திரையுலகில் இயக்குநராகவும் சாதித்தவர், அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சனை வைத்து, ஹிந்துஸ்தான் படத்தை இயங்கியவர். ”

இதுவரை 80 க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகும், ஸ்டண்ட் மாஸ்டராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.