உனக்கு வயசே ஆகாதா? – ஜெனிலியா பார்த்து வியந்த நடிகர் யார் தெரியுமா?

உனக்கு வயசே ஆகாதா என ஜெனிலியா ஜெயம் ரவியை பார்த்து கேட்டுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 24வது படமாக உருவாகின்றது ‘கோமாளி’ திரைப்படம். இசாரி கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ஜெயம்ரவி ஆதிவாஷி, பிரிட்டிஷ் கால அடிமை என 9 வேடங்களில் நடிக்கின்றார்.

https://twitter.com/jayam_mohanraja/status/1132594842909855744

ஸ்கூல் பையன் :
நேற்று கோமாளி படத்தின் இறுதி போஸ்டர் வெளியானது. இதில் ஜெயம்ரவி ஸ்கூல் பையன் போல இருக்கும் போஸ்டர் அனைவரையும் வியப்படையும் வகையில் உள்ளது.

https://twitter.com/jayam_mohanraja/status/1132594842909855744

ஜெனிலியா ஆச்சர்யம்:
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து ஜெனிலியா நடித்திருந்தார்.

தற்போது கோமாளி பட பள்ளி மாணவனாக ஜெயம் ரவி இருக்கும் போஸ்டரைப் பார்த்து ஜெனிலியா என்ன ஜெயம்ரவி இது. உனக்கு வயதே ஆகாதா… உன்னைப் பார்க்க பதின்ம வயது பையனைப் போலவே இருக்கு. வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.