பிக்பாஸ் 3-க்குள் நுழையும் ஓவியாவுடன் நடித்த பிரபல நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 1 மற்றும் பிக்பாஸ் 2-வுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் 3 விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான புரோமோ வீடியோவையும் விஜய் டிவி வெளியிட்டுவிட்டது. ஆனால் அதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் என்பதை மட்டும் விஜய் டிவி சீக்ரெட்டாக வைத்துள்ளது.

அதைப் பற்றி இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகமல் இருந்த நிலையில், நடிகையான ஜாங்கிரி மதுமிதா இந்த நிகழ்ச்சியில் இருப்பது உறுதியாக தெரிந்தது.

இதைத் தொடர்ந்து மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக யார் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின் படி நடிகை ஓவியாவுடன் 90 ML திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை ஸ்ரீ கோபிகா பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.