நம்மையே ஜோக்கரா மாத்திடுவாங்க: அரசியலில் இருந்து விலகியதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு!

அரசியலில் இருந்து விலகியுள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. எனினும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். நடிகை மட்டுமில்லாமல், நடன இயக்குனராகவும் திகழ்கிறார்.

சினிமாவைத் தொடர்ந்து அரசியலில் பாஜக கட்சியில் இணைந்து அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். கடந்த சில வருடங்களாக பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வர வர அரசியல் கீழ்த்தரமாக மாறிவிட்டது. எப்போது பார்த்தாலு மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பது தான் அரசியல் ஆகிவிட்டது. பக்குவமான தலைவர்கள் என்று யாரும் இங்கு இல்லை. உருப்படியா எதுவும் நடக்கவே இல்லை.

அரசியலில் எனக்கு இருந்த ஆர்வம் இப்பொழுது இல்லாமல் போய்விட்டது. அப்படியே அரசியலில் இருந்தால் நம்மை ஜோக்கராகவே மாற்றிவிடுவார்கள். சினிமாவில் ஹீரோக்களும் இருக்கிறார்கள், வில்லன்களும் இருக்கிறார்கள். ஆனால், அரசியல் என்பது வில்லன் ரோல் மாதிரி ஆகிவிட்டது. ஆதலால், அரசியலில் இருந்து விலகுகிறேன். தற்போது எந்த அரசியல் கட்சியையும் நான் ஆதரிவிக்கவில்லை. இது தானாக எடுத்த முடிவு என்று குறிப்பிட்டு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.