ஆண்களுக்கு இணையாக களத்தில் இறங்கி கலக்கியிருக்கும் திரிஷாவின் பரமபதம் விளையாட்டு டிரைலர்

த்ரிஷாவின் 36ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் பரமபதம் விளையாட்டு படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா, நந்தா, வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் பரமபதம் விளையாட்டு. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.