திருமணத்திற்கு பின் முற்றிலும் மாறிய மணிமேகலை… எங்களுக்கு யாரும் உதவவில்லை

தமிழில் தொகுப்பாளினிகளாக இருப்பவர்களில் மணிமேகலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஏனெனில் சன்மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் இவர் நடன இயக்குனர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்க்ளின் எதிர்ப்பையும் மீறி மணிமேகலை ஹுசைனை கரம் பிடித்தார்.

https://www.instagram.com/p/BwwUWrnFvnP/

தற்போது ஒரு குடும்பத்தின் தலைவியாக இருக்கும் மணிமேகலை, திருமணத்திற்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், ஒரு குடும்பத்தலைவி என்பதை விட மூன்று மடங்கு குடும்பத்தலைவியாக பொறுப்பில் இருக்கிறேன். ஏனெனில் எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை நான், ஹுசைன் மட்டுமே, எங்களுக்கு அறிவுரை சொல்வதற்கு பெரியவர்கள் யாரும் உடன் இல்லை, எதுவாக இருந்தாலும் நாங்கள் தான் முடிவை எடுக்க வேண்டும்.

பணம் இல்லை என்றாலும் கூட அதை வெளியில் காட்டாமலும் கெத்தாக அட்ஜஸ்ட் செய்வோம். ஒருநாள் எங்க வேலையில் நாங்க கவனம் செலுத்த வில்லை என்றால் பாதிப்பு எங்களுக்குத்தான். ஓடிட்டே இருக்கோம்.

நாளைக்கான வாழ்க்கைக்காகன்னு சொல்லிட்டு இன்னைக்கான வாழ்க்கையை வாழாம இல்லை. ஒவ்வொரு நாளையும் சந்தோஷமா கொண்டாடி வாழ்ந்துட்டு இருக்கோம்.

https://www.instagram.com/p/BwuT76KF66C/

இப்போதைய நிலைமைக்கு வீட்டில் பேச வேண்டாம் என்றிருக்கிறோம், ஏனெனில் நாங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பின்னரே அவர்களை பார்க்க வேண்டும், இப்போது சென்று பார்த்தால், அவர்கள் ஏதோ தேவைக்காக வந்திருப்பார்கள் என்று நினைப்பர்.

ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால் திருமணத்திற்கு பின் முற்றிலும் மாறியிருக்கிறேன். முன்பு எல்லாம் ரூமில் ஏசி ஓடினால் அதை ஆப் பண்ணாமலேயே சென்றுவிடுவேன்.

இப்போ, ஒரு மணி நேரம் ஏசி ஓடிடுச்சுல ரூம் கூலிங் ஆகிட்டு போதும்னு ஏசியை ஆப் பண்றேன். அதே மாதிரி, முன்னாடி அவ்வளவு சாப்பாடு வேஸ்ட் பண்ணுவேன்.

https://www.instagram.com/p/BwmQpxMle0T/

இப்போ கொஞ்சம் கூட வேஸ்ட் பண்றதில்லை. அப்படியே சாப்பாடு மிஞ்சினா கூட இல்லாதவங்களுக்கு கொடுத்து விடுறேன். ஏதோ ஒன்றுக்காக நாம கஷ்டப்படும்போது அதோட அருமை நிச்சயம் நமக்கு புரியும்.

எதிர்காலத்துல நாங்க நல்ல நிலைமையில் இருக்கும் போது, எங்களுக்கு யாரும் ஹெல்ப் பண்ணலை. நாங்களே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கோம்’னு கெத்தா சொல்லுவோம் என்று கூறி முடித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.