பரபரப்பாக நடைபெற்ற திருமண ஏற்பாடு..! திடீரென மாறிய யாரடி நீ மோகினி நாயகியின் காதலன்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் நாயகியாக நடித்திரு வருபவர் நச்சத்திரா.

இவர் தமிழ் சினிமாவில் வெளியான கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ராம்தேவ் என்பவர் நாயகனாக நடிக்க தமிழ் என்பவர் வில்லனாக நடித்திருந்தார்.

ராம்தேவ் மற்றும் நச்சத்திரா ஆகியோர் காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளார் நச்சத்திரா.

மேலும் நான் காதலிப்பது தமிழை தான். எங்கள் வீட்டிலும் சொல்லி சம்மதம் வாங்கி விட்டோம், விரைவில் திருமணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.