நடிகை ஜோதிகாவா இது! 20 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்துள்ளார் பாருங்க

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

மேலும் தற்போதும் குலேபகவாலி இயக்குனர் கல்யாணின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படம் மே 17-ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல நடன இயக்குநர் பிருந்தா, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிகாவுடன் தான் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்றை தற்போது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அத்தோடு தற்போது எடுத்துகொண்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு 20 Years Challenge With Joe என்றும் கூறியுள்ளார்.

ஜோதிகாவின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.