தளபதி-63ல் நயன்தாராவை தொடர்ந்து இணைந்த முன்னணி நடிகை, யார் தெரியுமா?

தளபதி 63’ படத்தில் மீண்டும் இன்னொரு நாயகி இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்திற்காக இணைந்துள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.