திருமணத்தில் ஜூலியை அவமானப்படுத்திய நடிகை..!! ஆறுதல் கூறிய பிக்பாஸ் குடும்பத்தினர்..!!


நடிகை நமீதாவின் திருமணம் திருப்பதி கிருஷ்ணர் கோவிலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதில், பிக்பாஸ் குடும்ப உறுப்பினர்களான ஆர்த்தி,சக்தி,காயத்திரி போன்றோர் கலந்து வாழ்த்தியுள்ளனர்.

நமீதா பிக்பாஸ் வீட்டில் சந்தித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது கண்டிப்பாக என் திருமணதிற்கு அனைவரையும் அழைப்பேன் என்று கூறிய நமிதா.

ஜூலியானாவை கட்டிப்பிடித்து கண்டிப்பா மீட் பண்லாம் என்று கூறினார். ஆனால், தனது திருமணத்திற்கு ஜூலிக்கு நமிதா அழைப்பு விடுக்கவில்லை.அது மட்டும் இல்லை.

பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியில் வந்த பிறகு பிக்பாஸ் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு திறப்பு விழா, ஓட்டல் நிகழ்ச்சி என்று பல அழைப்புகள் வந்தாலும் ஜூலிக்கு எந்த வித அழைப்பும் வருவது இல்லை.

இதனால், திருமண வீட்டில் ஜூலி அழைப்பு விடுக்காதது குறித்து பல்வேறு கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.

அதில், பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற அனைவரும் சினிமா பிரபலங்கள், ஜூலி திரைப்பிரபலம் இல்லாதவர்.

இதனாலேயே ஜூலிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இனம் இனத்தோடு தான் சேரும்..! என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு..! என்று பலரும் கூறுகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#