திருமணத்திற்கு முன்பே ஒன்றாக வெளிநாட்டில் சுற்றும் விஷால்-அனிஷா

நடிகர் விஷால் மற்றும் அனிஷா அல்லா ஆகியோரின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அது முடிந்த கையேடு விஷால் சுந்தர்.சி படத்தின் ஷூட்டிங்கிற்காக துருக்கிக்கு கிளம்பிவிட்டார்.

அங்கு ஷூட்டிங் நடந்தபோது விஷால் அடிபட்டு மருத்துவமனையில் கை மற்றும் காலில் கட்டுகளுடன் இருந்த புகைப்படங்கள் வெளியானது. சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கிவிட்டார் விஷால்.

இந்நிலையில் விஷாலோடு அவரது காதலி அனிஷாவும் அங்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஷூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்களாம்.

போட்டோக்கள் இதோ..