கடைசி வரை நிறைவேறாமல் போன இயக்குனர் மகேந்திரனின் ஆசை! அது என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். இவர் இன்று உடல்நல குறைபாடு காரணமாக மரணமடைந்தார். இதனால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

அதே சமயம் தொடர்ச்சியாக இயக்குனர் மகேந்திரன் பற்றிய விசயங்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் தான் அவர் அஜித்தை இயக்க ஆசைப்பட்டதாகவும் அதுவும் பேஸ்கட் பால் சம்மந்தப்பட்ட கதையை இயக்க ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இறுதி வரை இயக்குனர் மகேந்திரனின் ஆசை நிறைவேறாமல் போனது வருத்தத்திற்குரிய விசியம் தான்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.