நடிகையிடம் உள்ளாடை அணியாமல் வருமாறு கூறிய தயாரிப்பாளர்!

தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரபல நடிகை கங்கனா ரணாவத். மேலும் நடிகைகளில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் கங்கனா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மணிகர்னிக்கா’. இந்தப் படத்தில் இவர் நடித்தும் இயக்கியும் இருக்கிறார்.

இந்நிலையில் தான் நடிக்க வந்த புதிதில் தனக்கு நடந்த அந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். ‘‘முதன் முறையாக தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானி ‘ஐ லவ் யூ பாஸ்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தார். அந்தப் படத்தின் போட்டோஷூட்டுக்கு சென்றபோது உள்ளாடை எதுவும் அணியாமல் மெல்லிய துணியாலான மேலாடையை மட்டும் அணிந்து வரச் சொன்னார்.

இந்தப் படத்தில் இளம் வயது பாஸ் மீது மோகம் கொள்ளும் இளம் பெண் கேரக்டரில் நான் நடிக்க வேண்டும். அந்தப் படத்திற்கு நான் தேர்வானேன். ஆனால் அந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் யாருக்கும் தெரியமல் ஓடிவிட்டேன். என்னை தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு என்னுடைய செல் நம்பரையும் மாற்றிவிட்டேன்’’ என்றார் கங்கனா ரணாவத்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.