ஷில்பாவ பார்த்தே ஆகணும் – சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்.!

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஸ்கின் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் மகனாக நடித்துள்ள அஸ்வந்த்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அளவிற்கு அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டைலாக்களிலும் பட்டய கிளப்பி உள்ளார்.

படத்தின் கதைக்களம் :

விஜய் சேதுபதி காயத்ரியை திருமணம் செய்து கொண்டு அவருக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் வீட்டை விட்டு துபாய் சென்று திருநங்கையாக மாறி விடுகிறார். தன்னுடைய மகன் ஆசைப்படுகிறான் என்பதற்காக மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வருகிறார்.

திருநங்கையாக விஜய் சேதுபதியை பார்த்த அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி. அதன் பின்னர் அவர் இந்த சமூகத்தில் எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறார் என்பது ஒரு டிராக்.

அதே போல் சமந்தா பகத் பாசிலின் மனைவியாக நடித்துள்ளார். திருமணத்திற்கு முன்னர் ஒருவரை சமந்தா காதலிக்கிறார். வீட்டில் வலுக்கட்டாயமாக பகத் பாசிலுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். ஒரு நாள் சமந்தா தன்னுடைய முன்னாள் காதலனுடன் போனில் பேசுகிறார். அவரை வீட்டிற்கு அழைக்கிறார். இருவரும் உடலுறவு கொள்கின்றனர். அந்த படுக்கையிலேயே அந்த இளைஞர் இறந்து விடுகிறார். இது சமந்தாவின் கணவருக்கும் தெரிய வர அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது. அவர் எப்படியான பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கிறார் என்பது மற்றொரு டிராக்.

அதே போல் 5 நண்பர்கள் கொண்ட குரூப் பள்ளியை கட் அடித்து விட்டு நண்பனின் வீட்டில் ஆபாச படம் பார்க்கின்றனர். அந்த படத்தில் நடித்திருப்பது ரம்யா கிருஷ்ணன். அவர் இந்த 5 பேரில் ஒருவரின் அம்மா. தன்னுடைய அம்மாவை பலான படத்தில் பார்த்த அந்த சிறுவனின் கோபம் அம்மாவை கொலை செய்யும் அளவிற்கு தூண்டுகிறது. இறுதியில் இவர்களின் குடும்பத்தில் என்ன நடக்கிறது. ஆபாச படங்களில் நடிக்கும் பெண்களை இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பது மூன்றாவது டிராக்.

இந்த மூன்று குடும்பங்களின் வாழ்க்கையை பேசுவது தான் சூப்பர் டீலக்ஸ் படத்தின் கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

இயக்குனர் தியாகராஜா இதுவரை தமிழ் சினிமா பார்க்காத அளவிற்கு ஒரு வித்தியாசமான பாதையில் படத்தை கொண்டு சென்றுள்ளார்.

படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணா என ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளும் மிக சிறப்பான தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். விஜய் சேதுபதிக்கு திருநங்கை கெட்டப் கச்சிதமாக பொருந்தியுள்ளது.

படம் மூன்று டிராக்குகளாக சென்றாலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு துளியும் குறையவில்லை. சலிப்பு ஏற்படவில்லை. படத்தில் காமெடிக்கும் பஞ்சமில்லை. அதே சமயம் நேரடியான கெட்ட வார்த்தைகளும் சில இடங்களில் இடம் பெற்றுள்ளன.

விஜய் சேதுபதியை மட்டுமே படம் முழுக்க திரையில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றால் நிச்சயம் அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்.
தொழில் நுட்பம் :

இசை :

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்தின் ஒவ்வொரு டிராக்கிற்கும் ஏற்றார் போல அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

பி.எஸ் வினோத் மற்றும் நீரவ் ஷா என இருவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு இடத்திலும் குத்தம் சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக அவர்களது பணிகளை செய்துள்ளனர்.

எடிட்டிங் :

படத்தில் வித்தியாச வித்தியாசமான ட்ராக்குகள் இருப்பதால் நிச்சயம் எடிட்டரின் கை வண்ணம் அவசியம். அதனை நன்கு உணர்ந்து தன்னுடைய முழு திறமையும் வெளிப்படுத்தியுள்ளார் எடிட்டர் சத்யராஜ் நடராஜன்.

தம்ப்ஸ் அப் :
1. படத்தின் கதை
2. வித்தியாசமான திரைக்கதை
3. திருநங்கைகளுக்கு இச்சமூகத்தில் ஏற்படும் அவலத்தை பேசி இருப்பது
4. கள்ள காதலால் குடும்ப சீரழிவை பேசி இருப்பது.
5. ஆபாச நடிகைகளின் நிஜ வாழ்க்கையை பேசி இருப்பது.
6. காமெடி


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.