படப்பிடிப்பிற்கு செல்லும் கேரவனுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா! ரசிகர்களை ஷாக்காக்கிய அல்லு அர்ஜூன்

தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களில் அல்லு அர்ஜூனும் ஒருவர். இந்தியா முழுக்க பரவலாக இவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளது.

இவரது நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு என் பெயர் சூர்யா என்ற படம் வெளியாக இருந்த நிலையில் அல்லு அர்ஜூனை பற்றிய ஹாட் டாபிக் ஒன்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

அது என்னவென்றால், படப்பிடிப்பிற்கு நடிகர், நடிகைகளை அழைத்து செல்லும் கேரவன் வாகனத்திற்காக அல்லு அர்ஜூன் 4 கோடி ரூபாய் செலவு செய்து தனக்கு ஏற்றாற் போல் அவ்வாகனத்தில் மாற்றம் செய்துள்ளது தான். தனது சொந்த செலவில் மாற்றம் செய்ததால் அந்த வாகனத்தை சொந்தமாகவும் வைத்து கொண்டுள்ளார்.

ட்ரீ விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் புதியதாக நடிக்கவுள்ள படத்தில் இருந்து அந்த வாகனத்தை பயன்படுத்தவுள்ளாராம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.