திருமணம் நெருங்கும் நிலையில் விஷாலுக்கு நேர்ந்த சோகம்!

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என பன்முகம் கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் விரைவில் அயோக்கியா திரைப்படம் ரிலீசாக உள்ளது.

மேலும் இவர் தற்போது சுந்தர்.சி இயக்கி வரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் துருக்கியில் நடைபெற்று வருகின்றன.

அப்போது பைக் ஸ்டண்ட் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் விஷாலுக்கு கை மற்றும் காலில் அடிபட்டுள்ளது. இதனையடுத்து படக்குழு அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விஷால் சிகிச்சை முடிந்து விரைவில் பூரண குணமடைந்து படப்பிடிப்பிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.