நயன்தாராவிற்காக பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யாவின் தங்கை செய்த செயலை பாருங்க..வைரலாகும் புகைப்படம்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தவர் ஐஸ்வர்யா டுட்டா. பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று மேலும் பிரபலமானார்.

மஹத்துடன் புதியதாக ஒரு படத்தில் நடித்துவரும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாராவிற்காக தனது தங்கை எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஷரிகா மைத்ரியே என தனது 12 வயது தங்கையின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் தங்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நயன்தாராவை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ராதா ரவி அசிங்கமாக திட்டிய விவகாரம் தற்போது சூடுப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.