உண்மையான காதலை உணர்த்தும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்.!

ரஞ்சித் ஜெயக்கொடியின் கதை, திரைக்கதை , வசனம் மற்றும் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மா.கா.பா ஆனந்த், பால சரவணன், பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

கதைக்களம் :

ரோட் சைடு ரோமியாவாக அடிதடி, சண்டை என சுற்றி கொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவருடைய சிறிய வயதிலேயே இவருடைய அம்மா வேறொருவருடன் புதிய வாழ்க்கையை அமைத்து கொள்கிறார்.

இதனால் மனமுடைந்த ஹரிஷ் கல்யாண் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதையே தன்னுடைய குணமாக வைத்து கொண்டிருக்கிறார்.

பின்னர் இவருக்கும் நாயகியான ஷில்பாவிற்கும் இடையே காதல் ஏற்படுகிறது. தன்னனுடைய அம்மாவை போல காதலியும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற எண்ணத்திலேயே ஹரிஷ் கல்யாண் எதற்கெடுத்தாலும் கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

இப்படியான கோபத்தால் இவர்களுக்குள்ளான காதல் என்னவாகிறது? என்பதை மிகவும் எதார்த்தமாக சொல்லுவது தான் இப்படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

பெண் என்பது ஒரு பொருள் அல்ல என்பதையம் காதலில் ஈகோ இருந்தால் அந்த காதல் என்னவாகும்? உண்மையான காதல் என்ன என்பதையெல்லாம் ஆழமாக இப்படம் பேசுகிறது.

காதலர்களும் காதல் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்படுபவர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது.

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

ஹரிஷ் கல்யாண் :

ஹரிஷ் கல்யாண் முதல் முறையாக இப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாணை சாக்லேட் பாயாக பார்த்து ரசித்தவர்கள் ஹரிஷ் கல்யாணை வேறொரு கோணத்தில் பார்க்கலாம்.

ஷில்பா மஞ்சிநாத் :

நாயகியான ஷில்பா மஞ்சிநாத் இப்படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பையும் எதார்த்தமாக பதிவு செய்துள்ளார்.

மா.க. பா ஆனந்த் மற்றும் பால சரவணன் :

மா.க.பா ஆனந்தும் பால சரவணனும் ஹரிஷ் கல்யாணின் நண்பனாகவும் காமெடி வேடத்திலும் நடித்துள்ளனர். இருவரும் அவரது கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளனர்.

இதர நடிகர்கள் :

பொன்வண்ணன், பன்னீர் புஷ்பங்கள், லிஸ்லீ ஆண்டனி, திவ்யா, ஆதித்யா ஆகியோர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழிநுட்பம் :

இசை :

சாம் சி.எஸ் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் :

கவின் ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பவன் ஸ்ரீ குமார் எடிட் செய்துள்ளார். இருவரின் பணியும் சிறப்பாக அமைந்துள்ளது.

ஸ்டண்ட் :

துப்பறிவாளன் தினேஷ் காசி இந்த படத்திற்கு ஸ்டண்ட் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹரிஷ் கல்யாணுக்கு ஏற்றார் போல சண்டை காட்சிகளை கச்சிதமாக அமைத்துள்ளார்.

இயக்கம் :

ரஞ்சித் ஜெயக்கொடி புரியாத புதிர் படத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். காதலர்கள் எப்படி காதலை புரிந்து கொள்ள வேண்டும் உண்மையான காதல் எது என்பதையெல்லாம் அலசியுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. காதலை பற்றி எதார்த்தமாக பேசியது
3. ஹரிஷ் கல்யாண், ஷில்பா ஆகியோரின் நடிப்பு
4. பின்னணி இசை

தம்ப்ஸ் டவுன் :

1. படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.