அஜித்துடன் ஜோடி சேரப்போகும் அந்த ஹீரோயின் யார் தெரியுமா..?


தல அடுத்த படமான விசுவாசம் படத்தின் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விவேகம் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடாததால், அஜித் தனது அடுத்த படத்திற்காவது சிவா அல்லாமல் வேறு இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால், தனது அடுத்த படத்திலும் சிவாவுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ள அஜித், தனது படத்திற்கான தலைப்பை நேற்று வெளியிட்டார்.

விசுவாசம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதன்மை ரேஸில் இருப்பது அனுஷ்கா, தமன்னா தானாம், இவர்களில் யாராவது ஒருவர் நடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆனால், சிவா எப்போதும் ஜோடி புதிதாக இருக்க வேண்டும் என்று கருதுபவர் என்பதால் கீர்த்தி சுரேஷிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

எது எப்படியோ, இவர்களில் யார் நடித்தாலும் அஜித் ரசிகர்களுக்கு அடுத்த தீபாவளி தல தீபாவளியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#