ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பிரபல காமெடி நடிகர் கோபு காலமானார்…!

பிரபல காமெடி நடிகர் கோபு என்ற டைப்பிஸ்ட் கோபு இன்று மருத்துவமனையில் உடல் நலமின்றி காலமானார். இவர் எம்ஜிஆர் ,சிவாஜி, ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமான காமெடி நடிகராக இருந்தார். நாடகத்தின் மீது உள்ள ஆசையால் 600க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.

இன்று திடீரென உடல்நிலை மோசமான காரணத்தினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி தற்பொழுது காலமானார். சினிமாபேட்டை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.