மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் “லேடி சூப்பர் ஸ்டார்”

90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் கலக்கியவர் நக்மா. ஆனால் திடீரென்று சினிமாவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன் . நான் நடித்த படங்களில் காதலன், மற்றும் பாட்ஷா ஆகியவை தெலுங்கு மொழியில் வெளியானது. என் நடிபையும். நடனத்தையும் பாராட்டினார்கள் ரசிகர்கள். அதனால் எனக்கு சினிமாவில் நல்ல பெயர் இருந்தது.

2002 ஆம் ஆண்டில் ஆர்த்தி அகர்வாலுக்கு அம்மாவாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்தேன். 2007 ஆம் ஆண்டு வரை போஜ்பூரி, பெங்காலி படங்களில் நடித்தேன். அரசியலில் ஈடுபட்டதால் சினிமாவை விட்டு விலகியிருந்தேன். ஆனால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.