தமிழில் அறிமுகமாகும் மற்றொரு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்ற வட இந்திய டிவி தொடர் நடிகையான திகங்கான சூர்யவன்ஷி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

ஹிந்தி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வட இந்திய சின்னத்திரை நடிகை டிகங்கான சூர்யவன்ஷி.

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்த இவர், தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் அமைப்பு சார்பில் வளர்ந்து வரும் நடிகை பிரிவுக்காக ‘தாதா சாஹப் பால்கே’ விருதை பெற்றுள்ளார் டிகங்கான சூர்யவன்ஷி.

இதையடுத்து இவர் தற்போது ‘நெடுஞ்சாலை’ இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் ‘ஹிப்பி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஆர்எக்ஸ்-100’ படத்தின் ஹீரோ கார்த்திக்கேயா கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

இதைத்தொடர்ந்து ‘ஹிப்பி’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் நடைப்பெற்று வருகிறது.

தமிழ் சினிமா குறித்து டிகங்கான சூர்யவன்ஷி கூறுகையில்,

இந்தியாவின் உயரிய விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்திய மொழிகளில் நடிக்க நல்ல கதையை எதிர்பார்த்து காத்திருந்தபோது, தமிழில் இந்த வாய்ப்பு கிடைத்தது.

ஷுட்டிங்கில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து நடிக்கிறேன்.

தமிழும், தெலுங்கும் கற்று வருகிறேன். தற்போது எதிரில் பேசுபவர்களின் உதட்டசைவின் மூலமாக அவர்கள் பேசுவதைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

தமிழில் இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவரும் என்றார்.

ஏற்கனவே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் குடிபுகுந்தார் ரைசா வில்சன்.

இவரைத் தொடர்ந்து தற்போது மற்றொரு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை தமிழுக்கு வருகை தருகிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.