தனது காதலி குறித்து முதன்முறையாக ஓபன் டாக் செய்த அனிருத்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அனிருத். ட்ரெண்டிற்கு ஏற்றவாறு பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனையடுத்து கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அனிருத் அளித்துள்ள பேட்டி ஒன்றில் காதல் குறித்து கேட்டதற்கு இசையமைக்க வருவதற்கு முன் காதலித்தேன்.

தற்போது படங்களில் பிஸியாக இருப்பதால் அதற்கெல்லாம் நேரமில்லை. அதற்காக இப்படியே இருந்து விட மாட்டேன். விரைவில் கமிட்டாகி விடுவேன் எனவும் கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.