அறம் படத்தின் தவறுகளை சுட்டி காட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்..!! அது என்னானு தெரியுமா..?


அட என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே மா என்று நம்மை மீண்டும் சொல்ல வைத்துவிட்டார் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன்.

சமீபத்தில் நயன்தாராவின் கோபி நைனார் இயக்கத்தில் நடிப்பில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற படம் அறம்.

ஆழ்துளை கிணறில் குழந்தை விழுந்துவிடுகின்றது. அந்தக்குழந்தையை மீட்டெடுக்க கலெக்டர், அரசு அதிகாரிகள் மற்றும் அந்த ஊர் மக்கள் எடுக்கும் பரபரப்பான முயற்சியே படத்தின் கதை.மக்களின் தண்ணீர் பிரச்னை, அரசியல் வாதிகளின் அடாவடி, அரசு அதிகாரிகளின் அலட்சியம், கிராம மக்களின் பரிதாமான அவல நிலை என்று படம் முழுக்க உணர்ச்சி பொங்க அமைந்த திரைக்கதை.

சினிமா நட்சத்திரங்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என்று இப்படத்தை பார்த்த அனைவரின் பாராட்டையும் பெற்றது இப்படம். இதுவரை ஒருவர் கூட இந்த படத்தில் குறை என்று எதுவும் சொல்லவில்லை. ஊரே தூக்கி வைத்து கொண்டாடும் படத்தில், ஒரு பார்வையாளராக இப்படத்தை பார்க்கும் பொழுது இந்த இரண்டு விஷயங்கள் எனக்குபிடிக்கவில்லை என்று தன் ட்விட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


அறம் படம் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது நயன்தாராவின் கதாப்பாத்திரம், கேமரா, மற்றும் இசை புடவையில் நயன்தாரா அழகோ அழகு …

ஒரு பார்வையாளராக எனக்கு, இந்த இரண்டு விஷயங்கள் பிடிக்கவில்லை
படத்தின் அசல் ஹீரோ அந்த குழந்தையை மீட்டெடுக்கும் சிறுவன் தான், ஆனால் அவனுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இரண்டாவது அந்த குழந்தை காப்பாற்றப்பட்டதும் முதல் உதவி கொடுத்திருக்க வேண்டும்; காலில் விழுவது ஏன் ?!!!!

மீடியா நபர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள், லேடி சூப்பர் ஸ்டார் என்ற அழுத்தத்தை நயன்தாராவுக்கு கொடுக்காதீர்கள், அந்த டைட்டில் இக்கு ஏற்ற மாதிரி மட்டும் கதைகள் தேர்வு செய்யும் நிலை வந்து விடும் . இதனால் அவரின் நடிப்பு திறன் முழுதாக வெளிப்படாது.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு ட்வீட் போட்டார்.


‘தமிழ் நாடு இந்த காலில் விழும் பழக்கத்தில் இருந்து வெளி வரவேண்டும். பெற்றவர்கள் காலில் மட்டும் தான் விழுவது சரி. மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் உடைய சினிமா, காலில் விழுவதை ஊக்குவிப்பது தவறு.’
தான் சொல்லவரும் கருத்து நயன்தாராவுக்கு எதிரானது அல்ல இப்பழக்கத்துக்கு எதிராக என்று விளக்கும் பதிலாக இருந்தது அந்த ட்வீட்.

அட ஆமாங்க இவங்க சொல்றதும் சரி தானே !!!

இந்தளவுக்கு ரீச் ஆனதால கண்டிப்பா எதாவது அரசியல் கட்சி தங்களுடைய பிரச்சாரத்துக்கு நயன்தாராவை கூப்பிடுவாங்க என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#