நயன்தாராவின் ஐரா ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள “ஐரா” திரைப்படம் மார்ச் மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் “ஐரா”. கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இதனை ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் என்பவர் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்தப் படத்துக்கு செனிசாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது “ஐரா” படம் மார்ச் 28ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.