லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகை!

லேடி சூப்பர் ஸ்டார், நடிகை நயன்தாராவின் கால் சீட் வேண்டும் என பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கும் நிலையில், அசால்டாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவரை இரண்டாம் இடத்திற்கு தள்ளி உள்ளார்.

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் ஹிட் ஆனதை தொடர்ந்து அவர் ஹீரோயின் கதையம்சம் கொண்ட ‘ஐரா’ மற்றும் சிவகார்த்திகேயனுடன் ‘மிஸ்டர் லோக்கல்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

அதே போல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களாகவே தேர்வு செய்து நடிக்கிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ , ‘கனா’ ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையை பிரபல பத்திரிகை ஒன்று சென்ற வருடத்தின் டாப் நடிகைகள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் “Most Desirable Woman 2018” என்கிற லிஸ்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார். நயன்தாராவுக்கு இரண்டாவது இடம்தான் கிடைத்துள்ளது. நடிகை சமந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.