நடிகர் சங்கத் தலைவரின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்..!! எதனால் தெரியுமா..?


தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்த வண்ணமே உள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படபிடிப்புகள் நடக்காது என அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது கேளிக்கை வரி உயர்த்தப்பட்டது. இதனால் டிக்கெட் விலை அதிகமாகியது. அதனை அடுத்து தமிழக அரசு சினிமாவிற்கு விதிக்கும் வரியை குறைக்க கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் கடந்த 8 நாட்களாக எந்த புதிய படத்தை வெளியிடவில்லை.


இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறது.

திரையரங்குகள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து அதே தினத்தில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்ய உள்ளது. இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வெளியிட்டுள்ளார்.

அதன்படி மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடக்காது, சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடக்காது. போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடக்காது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி