Ak58- படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது..!! குதூகலத்தில் தல ரசிகர்கள்..!!


வீரம், வேதாளம், விவேகம் ஆகிய வி படங்களின் வெற்றிக் கூட்டணியான அஜித் மற்றும் சிவா மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். அஜித் நடிக்கும் புதிய படமான ‘தல58’ படத்தை மீண்டும் சிவாவே இயக்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தன.

விவேகம்’ படத்துக்குப் பிறகு, அஜித் – சிவா நான்காவதாக இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் டி.தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ‘விசுவாசம்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.

‘ஜனவரி மாதம் ‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு, 2018 தீபாவளியன்று திரைப்படம் வெளியாகும்’ என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். படத்தில் நடிக்கும் பிற நடிகர் – நடிகைகளின் விவரமும் டெக்னிக்கல் டீமின் விவரமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தல58 அறிவிப்பிற்காக காத்துகிடந்த அஜித் ரசியக்ர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்தாக அமைந்துள்ளது சத்யஜோதி ஃபிலிம்சின் இந்த அறிவிப்பு. தல-யின் வீரத்தை பாத்துட்டீங்க..! விசுவாத்தை இன்னும் பாக்கலையே..! என்று மீம்ஸ்களை பறக்கவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

சற்று முன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பில் தல58 படத்தின் தலைப்பு “விசுவாசம்” எனவும், ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அஜித்ரசிகர்கள் #Visasam என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#