ஐந்து டீன் ஏஜ் நடிகர்களின் ‘சகா’ திரைவிமர்சனம்

இரண்டு டீன் ஏஜ் நண்பர்கள் சந்தர்ப்ப வசத்தால் ஒரு கொலை செய்துவிட்டு சிறுவர் சிறைக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு ஏற்படும் நட்பு, பகை, போன்ற அனுபவங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் நண்பனை கொலை செய்தவனை பழிவாங்க ஒருவனும், காதலியை ஆபத்தில் இருந்து காப்பாற்ற ஒருவனும், அக்காவை கொலை செய்தவனை பழிவாங்க ஒருவனும் என மூவர் சிறையில் இருந்து தப்பிக்கின்றனர். அவர்கள் தப்பித்ததன் நோக்கம் நிறைவேறியதா? அல்லது போலீசிடம் மீண்டும் பிடிபட்டார்களா? என்பதே இந்த படத்தின் கதை ஆகும்

சத்யா, கதிர், கங்கா, ஜாக்கி, சிவா என ஐந்து கேரக்டர்களில் சரண், பாண்டி, பிரித்வி, ஸ்ரீராம் மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். ஐவரின் நடிப்பும் ஓகே ரகம். ஆய்ரா மற்றும் நீரஜா ஆகியோர் ஆண்ட்டிகள் போல் இருப்பதால் டீஜ் ஏஜ் ஹீரோக்களுக்கு அக்கா போல் இருக்கின்றார். சிறை வார்டனாக தீனா நடிப்பில் அசத்தியுள்ளார்.
ஷபீரின் இசையில் பாடல்கள் சுத்தமாக தேறவில்லை. ஆனால் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். நிரன்சந்தர் ஒளிப்பதிவு ம்ற்றும் ஹரிஹரன் படத்தொகுப்பு ஆகியவை ஓகே ரகம்

சிறுவர் சிறையில் நடக்கும் சம்பவங்களை நம்பும்படி மிக அழகாக படமாக்கியுள்ளார் இயக்குனர் முருகேஷ். ஐந்து டீஜ் ஏஜ் நடிகர்களிடம் நன்றாக வேலை வாங்கி கதைக்கு தேவையான நடிப்பை வரவழைத்தது இவருடைய வெற்றி. ஹீரோஹின் தேர்வை கொஞ்சம் சரியாக செய்திருக்கலாம்.
படத்தின் கதை கொஞ்சம் மெதுவாக நகரும்போது திடீரென ஒரு டுவிஸ்ட்டை வைத்து பார்வையாளர்களை நிமிர வைப்பதில் திரைக்கதை ஜெயித்திருக்கின்றது. கிளைமாக்ஸ் காட்சிகள் நம்பும்படி இல்லை என்றாலும் படமாக்கப்பட்ட விதம் அருமை.

மொத்தத்தில் ஐந்து டீன் ஏஜ் நடிகர்களின் நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்காக இந்த படத்தை பார்க்கலாம்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.