விஜய் சேதுபதியுடன் இணைந்த பிரபல காமெடியன் – செம கூட்டணி.!

தமிழ் சினிமாவில் படு பிஸியான முன்னணி நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டும் தான். ஒவ்வொரு வருடமும் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இவரது நடிப்பில் விரைவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்க உள்ள இந்த படத்தில் முழு நேர காமெடியனாக நடிகர் சூரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் நிவேதா பெத்துராஜூம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.